வரதட்சணை கேட்டு கொலை: மாமனார், மாமியார் ஒப்புதல் வாக்குமூலம்

வரதட்சணை கேட்டு கொலை: மாமனார், மாமியார் ஒப்புதல் வாக்குமூலம்
வரதட்சணை கேட்டு கொலை: மாமனார், மாமியார் ஒப்புதல் வாக்குமூலம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், இளம்பெண்ணை வரதட்சணை கேட்டு கொலை செய்த வழக்கில் மாமனார், மாமியாருடன் சேர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட திவ்யாவின் கணவர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில், முத்தழகன் - ராணி தம்பதியின் உறவினரும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளருமான சிவக்குமார் மற்றும் கரூரைச் சேர்ந்த செந்தில் ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்கள் திவ்யாவை அடித்தும், தலையணை மூலம் அமுக்கியும் கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com