[X] Close

இறந்துவிட்டதாக உடலை எரியூட்டிய நிலையில் 7 நாளில் திரும்பி வந்த நபர்: அதிர்ச்சி பின்னணி!

இந்தியா

Rajasthan-A-person-who-returned-home-a-week-after-his-family-performed-rituals-thinking-he-was-dead

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பொது இறந்து விட்டதாக கருதி குடும்பத்தார் அவரது உடலை பிணவறையில் அடையாளம் கண்டுள்ளனர். தொடர்ந்து அவருக்கு கடந்த 15ஆம் தேதி அன்று இறுதி சடங்குகளும் செய்துள்ளனர். இந்நிலையில் இறந்து விட்டதாக கருதி குடும்பத்தாரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட அந்த நபர் 7 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார். அவரை நேரில் பார்த்ததும் குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். 


Advertisement

என்ன நடந்தது?

40 வயதான ஓம்கர் லால் கடுலியா மது பழக்கத்திற்கு ஆளானதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கடந்த 11 ஆம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவரது குடும்பத்தார் யாருக்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஷயத்தை அவர் சொல்லாமல் இருந்துள்ளார். அதே நாளில் வேறொரு நோயாளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Advertisement

மருத்துவமனையில் இரண்டாவதாக அனுமதிக்கப்பட்ட அந்த நோயாளிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவரது உடலை யாரும் வாங்க முன்வராததால் அடையாளம் தெரியாதவர்கள் பட்டியலில் அவரை மருத்துவமனை நிர்வாகம் சேர்த்துள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த இறந்தவரின் அடையாளத்தை தகவலாக பொது மக்களிடையே பகிர்ந்துள்ளனர். இதை அறிந்த ஓம்கர் லால் கடுலியாவின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து இறந்தவரின் உடலை தவறுதலாக ஓம்கர் என அடையாளம் கண்டு, அவரது உடலை பெற்று வந்து எரியூட்டி உள்ளனர். 

மருத்துவமனையில் வேறொருவரின் உடலை ஓம்கர் குடும்பம் பெற்று வந்து எரியூட்டிய விவகாரம் அவர் வீடு திரும்பிய பிறகுதான் தெரியவந்துள்ளது. அதனால் போலீசார் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இறந்தவரின் உடல் ஓம்கர் அனுமதிக்கப்பட்டிருந்த அதே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவர்தனின் உடல் என்றும், அவரது உடலை உறவினர்கள் யாரும் வாங்க முன்வராதது தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என சொல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close