Published : 28,May 2021 03:35 PM
கன்னியாகுமரியில் குறைந்தது மழை - குடியிருப்புகளில் இருந்து வடிய தொடங்கிய நீர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்ததால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளன.
கடந்த மூன்று நாட்களாக மாவட்டம் முழுவதும் கொட்டித் தீர்த்த மழையால், ஆறு மற்றும் அணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் மக்கள் அவதியடைந்தனர். தற்போது மழை குறைந்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியுள்ளது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
கோதையாறு, தாமிரபரணி, பரளி ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.