[X] Close

மதுரை: கொரோனா மருந்து என பாம்பை கடித்து தின்ற நபருக்கு ரூ.7,500 அபராதம் விதித்த வனத்துறை

கொரோனா வைரஸ்,வீடியோ ஸ்டோரி

கொரோனா நோய்க்கான மருந்து, பாம்புதான் எனக்கூறி, அதனை கடித்து தின்ற நபருக்கு 7ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


Advertisement

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. விவசாயக் கூலியான இவர் அப்பகுதியில் வயல்வெளியில் சுற்றி திரிந்த பாம்பு ஒன்றினை உயிருடன் பிடித்து, கொரோனா நோய்க்கு இது அரிய மருந்து எனக்கூறிக் கொண்டே அதனை வாயில் வைத்து கடித்து உண்ணுகிறார்.

அதனை மற்றொரு நபர் வீடியோ எடுக்கவே, தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட வனத்துறையினர், பாம்பு கறி சாப்பிட்ட நபருக்கு 7ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close