[X] Close

“யானைகளை விரட்ட மாற்று வழிகளை ஆராய வேண்டும்” - கமல்ஹாசன்

தமிழ்நாடு

kamalhassan-said-Alternative-ways-to-repel-elephants-should-be-explored


Advertisement

யானைகளை விரட்ட மாற்று வழிகளை ஆராய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சத்தியமங்கலம் அருகே உயரழுத்த மின்வேலியில் சிக்கி மீண்டும் ஒரு யானை உயிரிழந்துள்ளது. தமிழகத்தில் யானைகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மின்வேலிகளுக்கு மாற்றாக ‘யானைகாத்தான்’போன்ற நீண்டுவளரும் கள்ளிச்செடிகளைக்கொண்டு உயிர்வேலிகள் அமைக்க விவசாயிகளை ஊக்கப்படுத்தவேண்டும். பொதுவாக தேனீக்களைக் கண்டு யானைகள் அஞ்சும் என்பதால் விளைநிலங்களில் தேனீக்களை வளர்ப்பதையும் ஊக்கப்படுத்தலாம். அரசும் விவசாயிகளும் உடனடியாக மாற்று வழிகளை ஆராய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close