பாலியல் புகாரில் சிக்கியுள்ள வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருதா?- கேள்வி எழுப்பிய நடிகை பார்வதி

பாலியல் புகாரில் சிக்கியுள்ள வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருதா?- கேள்வி எழுப்பிய நடிகை பார்வதி
பாலியல் புகாரில் சிக்கியுள்ள வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருதா?- கேள்வி எழுப்பிய நடிகை பார்வதி

பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞர் வைரமுத்து கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதுக்கு எப்படி தேர்வு செய்யப்படலாம் என்று கேரள அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை பார்வதி.

அவரது, ட்விட்டர் பக்கத்தில் “ஓ.என்.வி சார் நமது பெருமை. ஒரு கவிஞராகவும் பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஈடு செய்ய முடியாதது. நம் கலாச்சாரத்தையும் வளர்த்தது. அவரது இலக்கிய பணியால் நம் இதயங்கள் பயனடைந்துள்ளன. பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு அவர் பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை” என்று பாடலாசிரியர் வைரமுத்து ஓ.என்.வி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது விருது பெற்ற கேரளாவின் பிரபல இயலக்கியவாதியும் தேசிய விருது பெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி குறுப் பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இலக்கியத்திற்காக சிறந்த பங்களிப்பை செய்து வருபவர்களுக்கு ஓ.என்.வி விருது வழங்கப்பட்டு வருகிக்றது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசைக் கொண்ட இவ்விருதை பெறும் மலையாளி அல்லாத முதல் இலக்கியவாதி கவிஞர் வைரமுத்து என்பது  குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com