[X] Close

அமித் ஷா சொத்து மதிப்பு 300 சதவிகிதம் அதிகரிப்பு!

This-is-how-much-Amit-Shah-s-assets-grew-in-5-years

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவின் சொத்து மதிப்பு, 300 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத்தில், ஆகஸ்ட் 8-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடக்க இருக்கிறது. இதில், பா.ஜ.க சார்பில் அந்தக் கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா போட்டியிடுகிறார். தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த போது, தன் சொத்து மதிப்பு பற்றிய விவரங்களையும் தெரிவித்துள்ளார். அதில் கடந்த 5-ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 300 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. 

2012ல் 1.90 கோடி ரூபாயாக இருந்த அவரது அசையும் சொத்து மதிப்பு தற்போது 19 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.  அசையா சொத்து மதிப்பு, 6.63 கோடியில் இருந்து, 15.30 கோடியாக உயர்ந்துள்ளது. தந்தை வழியில் 10.38 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கிடைத்ததாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close