[X] Close

டெல்லி: பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட பிரபல யூடியூபர் கைது!

இந்தியா

Delhi-YouTuber-Arrested-For-Flying-Dog-With-Hydrogen-Balloons-In-Video

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்டு வீடியோ எடுத்து வெளியிட்ட பிரபல யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப்பில் 'GauravZone' என்ற பெயரில் சேனல் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இவர் வெளியிடும் வீடியோ ஒவ்வொன்றும் பல லட்சம் வியூஸ்களை  அள்ளிக் குவிக்கிறது.

சமீபத்தில் இவர் ஹீலியம் பலூன்களில் தனது நாய்க்குட்டியை கட்டி, பறக்க விட்டபடி எடுத்த வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் நாயை வதை செய்வதாக கருத்து தெரிவித்து வந்தனர். பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்ததை தொடர்ந்து அந்த வீடியோவை டெலிட் செய்தார். 


Advertisement

உரிய பாதுகாப்பு வசதிகளுடன்தான் நாயை பறக்க விட்டதாகவும், நாயை வதை செய்யவில்லை என்றும் விளக்கம் தெரிவித்த அவர், இதனால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். எனினும் தெற்கு டெல்லியில் உள்ள மால்வியா நகர் காவல் நிலையத்தில் யூடியூபர் மீது வழக்குப் பதியப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். 

Related Tags : DelhiYouTuber DogGauravZone

Advertisement

Advertisement
[X] Close