Published : 27,May 2021 12:07 PM

கன்னியாகுமரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை: பெரும் பாதிப்பில் மக்கள்

கன்னியாகுமரியில் மூன்றாவது நாளாகக் கொட்டித் தீர்க்கும் மழையால், மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

மழையின் காரணமாக சாலைகள் முழுவதும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து 8ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதே போல பெருஞ்சாணி அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் முழுவதும் வெள்ள நீர் சூழந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை தங்க வைப்பதற்காக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மழையின் காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. மாவட்டம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்