
ஊரடங்கின்போது சரக்கு போக்குவரத்து லாரிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் புகார் கூறியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளிடம் வாகன தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் திருச்சி, திருவாரூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தடுத்து நிறுத்துவதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகளும் தமிழகத்தின் பல இடங்களில் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்தப் போக்கை கைவிடுவதுடன் இது குறித்து அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் உரிய வழிகாட்டுதலை பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சருக்கு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.