[X] Close

தினசரி பாதிப்பு 1,550 - டெல்லியில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று

இந்தியா,கொரோனா வைரஸ்

Steep-Decline-in-Daily-COVID19-Positivity-rate-in-Delhi-Union-Territory-of-India

தலைநகர் டெல்லியில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும், 26,000-க்கு குறைவானோரே சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் டெல்லியில் படுமோசமாக இருந்தது. அடுத்தடுத்த உயிரிழப்புகளால் உடல்களை எரியூட்டவும் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் நேரிட்டது. இந்நிலையில் கடுமையான ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட சீரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 

ஒரே நாளில் 1,550 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,375 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 24,578 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close