[X] Close

முதலமைச்சர் செல்லும் வழியில் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு நெகிழ வைத்த போலீசார்!

On-the-way-to-the-Chief-Minister-going-to-Ambulance--the-policeman-hugged

முதலமைச்சர் பழனிசாமியின் கார் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் நெருங்கிய போது, அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து ஆம்புலன்சுக்கு சாதகமாக போலீசார் வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.


Advertisement

திருவண்ணாமலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று மாலை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்கு முன்பாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொது மக்களுக்கு வேட்டி, சேலைகளை அவர் வழங்கினார். அப்போது முதலமைச்சரை காணவும், அவரிடம் மனு அளிக்கவும் ஏராளமான கட்சியினரும், பொதுமக்களும் அங்கு கூடியிருந்தனர்.

செஞ்சி நான்கு முனை சந்திப்பில் முதலமைச்சரின் கார் நெருங்கிய போது செஞ்சி அரசு மருத்துவமனைக்கு போக வேண்டிய 108 ஆம்புலன்ஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதையடுத்து ஆம்புலன்சுக்கு எந்தவித பிரச்னையுமின்றி செல்லும் வகையில் போலீசார் வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close