[X] Close

போலீசாரை கத்தியால் குத்திவிட்டு கைதி கடத்தல்

police-attacked-by-prisoner

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே போலீசாரை கத்தியால் குத்திவிட்டு கைதியை கடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   


Advertisement

ராஜாக்கமங்கலம் ஊராட்சி உட்பட்ட பகுதியில் வாகைக்குளம் உள்ளது. இந்த குளத்தில் கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மணலை அள்ளுவது தொடர்பான மோதலில், இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரவு மருகால்குறிச்சி சென்ற போலீசார் மணல் அள்ளுவது தொடர்பான புகாரில் உதயகுமார் என்பவரை கைது செய்து, இன்று அதிகாலை நீதிபதி இல்லத்திற்கு அழைத்து சென்றனர். இருதரப்பிலும் வழக்கு உள்ள நிலையில் ஒருதரப்பைச் சேர்ந்த உதயகுமாரை மட்டும் கைது செய்வதா என்கூறி, மருகால்குறிச்சியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரை சுற்றிவளைத்தனர். மேலும் சதிஷ்குமார் , கர்ணராஜ் ஆகிய காவலர்களை கத்தியால் தாக்கி அவர்களின் பிடியில் இருந்து உதயகுமாரை அவர்கள் கடத்தி சென்றனர். இதில் காயம் அடைந்த இரு காவலர்களும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கைதியை கடத்திச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close