காலை 7.00 மணிக்கு இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அமரர் ஊர்தி வழங்கவில்லை என உறவினர்கள் புகார். 8 மணி நேரத்திற்குப் பிறகு உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த சின்னபாப்பா (60) என்பவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (22.05.2021) காலை 6.50 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உறவினர்கள் அரசு அமரர் ஊர்தியை பதிவு செய்த நிலையில் 8 மணி நேரம் ஆகியும் அமர் ஊர்தி வராததால் அவதிப்பட்டுள்ளனர்.
மேலும் வார்டில் இறந்து கிடந்த சின்னபாப்பாவின் உடலை சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக அகற்றாமல் வார்டிலேயே விட்டுள்ளனர். உறவினர்கள் மற்றும் வார்டில் உள்ள நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 7 மணி நேரம் கழித்து சின்னபாப்பாவின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றியுள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டினர்.
ஒரு உடலை எடுத்துக் கொண்டு பர்கூர் வரை செல்ல முடியாது. இன்னோரு உடல் இருந்தால் தான் பர்கூர் வர முடியும் அதுவரை வரமுடியாது என அமரர் ஊர்தி ஓட்டுனரும், நிர்வாகத்தினரும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும், காலை முதல் தங்களை அலைக்கழித்ததாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டினர். இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சுமார் 8 மணி நேரத்திற்கு பின்னர் அரசு அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு உடல் பர்கூர் அனுப்பிவைக்கப்பட்டது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்