[X] Close

இப்படி தாங்க "மாஸ்க்" போடனும்: நடிகர் சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு!

கொரோனா வைரஸ்,வீடியோ ஸ்டோரி

தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிகர் சிவகார்த்தியேகன் மாஸ்க் எப்படி போடவேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.


Advertisement

அந்த வீடியோவில் “கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி  நிறைய உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசும் சுகாதார துறையும் நிறைய வழிமுறைகளை சொல்லியுள்ளனர்.நாம் முதலில் செய்யவேண்டியது தடுப்பூசி போட்டுக்கொள்வதுதன். நான் எனது முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். அனைவரும் சமூக இடைவெளியுடன் இருங்கள். ஒன்றிணைவோம். கொரோனாவை வெல்வோம்” என்று வீடியோ வெளியிட்டிருப்பதோடு மாஸ்க் எப்படி அணிய வேண்டும் என்பதையும் வீடியோவில் விளக்கியுள்ளார்.

கொரோனா இல்லா தமிழகத்தை உருவாக்குவது மக்களின் கடமை நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காப்போம் என்ற தலைப்பில் அண்மையில் தமிழக அரசு வெளியிட்ட கொரோனா தடுப்பு விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தோன்றி இரட்டை முகக் கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தற்போது திரைத்துறையினரை கொண்டும் தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close