Published : 21,May 2021 06:44 PM

`கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்` - முதல்வர் ஸ்டாலின்

stalin-press-meet-about-covid-19-in-trichy

கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே தனக்கு மகிழ்ச்சியான நாள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள். தடுப்பூசியை பொருத்தவரை தமிழகம் கேட்டதை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. தேவையான தடுப்பூசிகளை பெற மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், `நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பது பற்றி அறிவிக்கப்படும். ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜூன் 3 ஆம் தேதிக்குள் அடுத்தகட்டமாக ரூ.2000 வழங்கப்படும்” என்றார்.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F862997547587928%2F&show_text=false&width=560" width="560" height="314" class="page_speed_86562608" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்