Published : 21,May 2021 06:22 PM

பேனரில் பெயர் இல்லாததால் ஆவேசமுற்று அதிகாரிகளை வசைபாடிய திமுக எம்எல்ஏ

சென்னை அருகே கொரோனா ஆய்வு பணிக்கு சென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பேனரில் தனது பெயர் இல்லாததால் அதிகாரிகளை வசைபாடினார்.

பூந்தமல்லியை அடுத்த நசரேத்பேட்டையில் தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் 74 படுக்கைகள் கொண்ட கொரோனா மையத்தை, பால்வளத்துறை அமைச்சர் நாசர், பூந்தமல்லி திமுக எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது அங்கிருந்த பேனரில் திமுக எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி தனது பெயர் இடம்பெறாததை கண்டு அதிகாரிகளை வசைபாடினார்.

அவரை சமாதானம் செய்ய அதிகாரிகள் முயன்றனர். ஆனால் முடியவில்லை. இறுதியில் அதிகாரிகள் மன்னிப்பு கோரினர். முதல்வர் ஸ்டாலின் தனது பெயரையும் புகைப்படத்தையும் பேனர்களில் வைக்க ஆர்வம் காட்டாத நிலையில் திமுக எம்.எல்.ஏவின் இந்த செயலால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்