[X] Close

ஈரோடு: ஓட்டுநரை பைப் கொண்டு சரமாரியாக தாக்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தமிழ்நாடு

sub-Inspector-Dismissal-for-assaulting-driver-by-pipe

ஈரோடு அருகே வேன் ஓட்டுநரை பைப் கொண்டு சரமாரியாக தாக்கிய உதவி ஆய்வாளர் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக குமரவேல் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்ட எல்லையான பழையகோட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஈரோடு‌ நோக்கி வந்து கொண்டிருந்த வேனை நிறுத்தி ஓட்டுனரிடம் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது ஓட்டுநர் தனது செல்போனில் இருந்த ஆவணங்களை காண்பித்ததாகவும் ஆனால், அதனை உதவி ஆய்வாளர் குமரவேல் ஏற்க மறுத்து தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

imageimage


Advertisement

இதனை ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது. அதனையடுத்து உதவி ஆய்வாளர் குமரவேல் சககாவலரிடம் இருந்த பைப்பை வாங்கி ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இதனைப்பார்த்த பெருந்துறை காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வராஜ், ஓட்டுநரை தாக்கிய குமரவேலை ஆயுதபடைக்கு மாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரைக்கு பரிந்துரைத்தார். இந்நிலையில் தற்போது உதவி ஆய்வாளர் குமரவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close