Published : 29,Jul 2017 05:03 AM

குடும்ப அட்டைகளை உடனே வழங்குங்கள் - கிரண்பேடி உத்தரவு

Kiran-Bedi-orders-to-issue-ration-card-soon

 

புதுச்சேரியில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்களை விட்டுக் கொடுத்த குடும்பத்தினருக்கு பச்சை நிற குடும்ப அட்டைகளை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில துணை ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 20 கிலோ இலவச அரிசி வழங்க ஏப்ரல் மாதத்துக்கு 20 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தாமாக முன்வந்து உணவுப் பொருட்களை விட்டுக் கொடுத்த குடும்பத்தினருக்கு பச்சை நிற குடும்ப அட்டையை துரிதமாக விநியோகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் வருமான வரி செலுத்துவோர், மத்திய, மாநில அரசு துறைகளைச் சேர்ந்த மூத்த உயரதிகாரிகள், அதிக வருவாய் ஈட்டுவோர் ஆகியோரை இலவச அரிசி திட்டத்தில் இருந்து விலக்குவது குறித்து புதுச்சேரி அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் மிச்சமாகும் நிதியை வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்