Published : 28,Jul 2017 01:59 PM

‘சிறையில் இருக்கும் சசிகலாவிடம் ஆலோசனை கேட்டால் என்ன தவறு?’

wrong-with-advising-Sasikala-in-prison

கட்சி விவகாரம் குறித்து சிறையிலிருக்கும் சசிகலாவிடம் ஆலோசனை கேட்பது தவறில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தண்டனை பெற்று சிறையிலிருக்கும் சசிகலா ஒரு குற்றவாளி என்றும் அவர் ஆளுங்கட்சியின் பொதுச்செயலாளராகத் தொடரக்கூடாது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தமிழகத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறையிலிருக்கும் சசிகலாவிடம் ஆட்சி குறித்து ஆலோசனை கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‌சசிகலாவிடம் கட்சி விவகாரம் தொடர்பாக கருத்து கேட்டால் என்ன தவறு என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதையடுத்து, அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளராக சசிகலா தொடர்வதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்