ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் பெற்ற பணத்தில் 7 கள்ளநோட்டுகள் இருந்ததாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சிவசேகர் தன் கணக்கிலிருந்து 3 லட்சம் ரூபாய் எடுத்து வேறொரு வங்கியில் டெபாசிட் செய்யும்போது அதில், 7 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகள் என அந்த வங்கி தரப்பில் கூறப்பட்டதாக சிவசேகர் தெரிவித்தார். அதேபோல், கவுரி சங்கர் என்பவர் தன் வங்கி கணக்கிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் எடுத்து வேறு வங்கியில் செலுத்தும்போது அதிலும் ஒரு கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, வங்கியில் எடுக்கும் பணத்தில் கள்ளநோட்டு இருப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக, வங்கி அதிகாரியிடம் கேட்டதற்கு உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Loading More post
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?