வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டிய 25க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
இரண்டாவது கொரோனா அலை பரவுவதற்கு முன்னர் இந்தியா சுமார் ஆறரை கோடி தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது. தற்போது இந்தியாவில் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது தொடர்பாக மத்திய அரசை நோக்கி கேள்விக்கணைகள் பாய்கின்றன.
தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. சுவரொட்டிகள் பற்றி விசாரணையை துரிதப்படுத்திய டெல்லி காவல்துறை, 25 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து 4 பேரை கைதும் செய்துள்ளது. டெல்லி காவல்துறையின் இந்நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர், ட்விட்டர் பக்கத்திலும் இதே சுவரொட்டியை பதிவு செய்து, தங்களையும் கைது செய்யுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான ஜெய்ராம் ரமேஷ், இந்த சுவரொட்டியை தனது வீட்டு வாசலில் ஒட்டி வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களிலும் #arrestmetoo என்ற ஹாஸ்டேக்கில் நெட்டிசன்களும், மத்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். இது அகில இந்திய அளவில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!