Published : 28,Jul 2017 10:26 AM

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி

Nitish-Kumar-s-victory-in-confidence-vote

பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றது. ஆளுநர் கேசரிநாத் திரிபாதி உத்தரவுப்படி இன்று காலை கூடிய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் நிதிஷ் குமார் தாக்கல் செய்து ஆதரவு கோரினார்.

அவர் சார்ந்த ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர். முடிவில் 131 வாக்குகள் பெற்று, பெரும்பான்மைக்கு தேவையானதைவிட 9 வாக்குகள் அதிகம் பெற்று நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றது.

முன்னதாக ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் புகார்கள் காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதலமைச்சர் பதவியை‌ நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். ஆனால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நேற்று காலை மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்