Published : 28,Jul 2017 08:58 AM
டேங்கர் லாரி டிராக்டர் மீது மோதி விபத்து

ஆக்ராவில் டேங்கர் லாரியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
சிகாந்தரா பகுதியில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது அதிவேகமாக வந்த டேங்கர் லாரி மோதியது. விபத்து நிகழ்ந்ததை அடுத்து, உடனடியாக டேங்கர் லாரி தீப்பற்றி எரிந்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 2 பேர் உடல் கருகி பலியான நிலையில், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தில் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.