[X] Close

முழு ஊரடங்கால் அரசுக்கு ரூ.2,900 கோடி வருவாய் இழப்பு: உயர்கிறது மதுபான விலை?

தமிழ்நாடு

possible-to-Rising-alcohol-prices-due-to-Loss-of-revenue-in-tamilnadu

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழக அரசுக்கு 2ஆயிரத்து 900கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கிற்குப் பிறகு மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

கொரோனா பரவல் காரணமாக வருகிற 24ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 15நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காரணமாக, தமிழக அரசுக்கு 2ஆயிரத்து 900கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 15நாட்களில் டாஸ்மாக் கடைகளின் மூலமாக கிடைக்கும் 2ஆயிரத்து 20கோடி ரூபாய் வருமானமும், பத்திரப்பதிவு மூலமாக வர வேண்டிய 500கோடி ரூபாய் வருமானமும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வருவாய் 386கோடி ரூபாய் வருமானமும் முடங்கியுள்ளது.

image


Advertisement

ஊரடங்கு காரணமாக, பெட்ரோல், டீசல் விற்பனை 75 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக பெட்ரோல் நிலைய விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளின் மூலமாகவே அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. இதனால், அரசின் வருவாயை வருங்காலத்தில் ஈடுகட்டும் வகையில், ஊரடங்கிற்குப் பிறகு டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது. ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் மதுபாட்டில்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close