[X] Close

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இலங்கை மறுப்பு!

Sri-Lanka-turn-down-Pakistan-Cricket-Board-invitation-to-play-T20-series

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட, இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.

பாகிஸ்தானில் 2009 ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் ஜெயவர்த்தனே, சங்ககாரா உள்ளிட்ட 7 வீரர்கள் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், 7 பேர் இறந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து இலங்கை அணி, பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட மறுத்துவருகிறது. இப்போது மீண்டும் மறுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன், சகாரியார் கான் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘ பாகிஸ்தானில் டி20 போடிகளில் விளையாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தேன். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தின் போது, இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை சந்தித்து பேசினேன். வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வோம் என உறுதி கூறினேன். ஆனால் அவர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுத்துவிட்டனர். உலகில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கெல்லாம் விளையாட்டுப் போட்டிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தானுக்கு இலங்கை வரமறுத்தது வியப்பாக இருக்கிறது’ என்றார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close