[X] Close

கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்த சிவகார்த்திகேயன்

சினிமா,கொரோனா வைரஸ்

actor-Siva-Kartikeyan-donated-25-Lakhs-for-Corona-Relief-Fund-

நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.


Advertisement

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்திருக்கிறார். மேலும், நடிகர் ஜெயம் ரவி தனது அண்ணன் மோகன் ராஜா, தந்தை எடிட்டர் மோகன் ஆகியோருடன் சென்று 10 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close