Published : 15,May 2021 11:03 AM

முதல்வர் பாதுகாப்பு படையினரின் வேன் மீது மோதிய பைக் - ஒருவர் உயிரிழப்பு

Bike-collides-Chief-Minister-Security-Force-van-in-tamilnadu

முதல்வர் செல்லும் பாதையில் சோதனை செய்து கொண்டிருந்த வெடிகுண்டு நிபுணர்களின் வாகனத்தின் மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் முதல்வர் செல்லும் பாதையில் வெடிகுண்டு நிபுணர்கள்சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு எதிரில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள்பயணித்த வேனை சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்தனர்.அப்போது அண்ணா மேம்பாலத்தில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு நபர்கள் அந்த வேன் மீது மோதினர்.

image

இந்த விபத்தில் பைக்கில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரும் பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஒருவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்தபாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வியாசர்பாடி அடுத்த எருக்கஞ்சேரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், கொடுங்கையூரைச் சேர்ந்த அருண் என்பதும் aதெரியவந்தது. படுகாயத்துடன் அருண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்