பிறந்தநாளுக்கு ‘சோலோ’வாக வந்த துல்கர்சல்மான்

பிறந்தநாளுக்கு ‘சோலோ’வாக வந்த துல்கர்சல்மான்
பிறந்தநாளுக்கு  ‘சோலோ’வாக வந்த துல்கர்சல்மான்


இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடித்து வரும் ‘சோலோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

மலையாள நடிகர் துல்கர்சல்மான் இன்று தனது 31ஆவது பிறந்த நாள் தினத்தை கொண்டாடுகிறார். அவருடைய பிறந்தநாளுக்கு மலையாள திரையுலகை சேர்ந்த திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். துல்கர்சல்மான் தற்போது பிஜாய் நம்பியார் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் சோலோ என்ற படத்தில் நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மற்றுமோரு போஸ்டர் நாளை வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குநர் பிஜாய் நம்பியார் தெரிவித்துள்ளார்.  

சமீபகாலமாக மலையாள மொழி திரைப்படங்கள் தமிழில் வெளியாகி நல்ல வரப்வேற்பை பெற்று வருகிறது. இதனால் மலையாள திரையுலகினர் தமிழிலும் படங்களை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் துல்கர்சல்மான்  ‘வாயை மூடி பேசமும்’ , ‘ஓ காதல் கண்மணி’  போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளதால் சோலோ வெற்றிப்படமாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com