Published : 14,May 2021 04:14 PM
9.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் திட்டம் தொடக்கம்!

பிரதமரின் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதி உதவி வழங்கும் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 7 தவணைகளாக நிதி அளிக்கப்பட்டுள்ளது. எட்டாவது தவணையாக சுமார் 9.5 கோடி விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.
உத்தபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும், விவசாயிகள் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளனர் என்றார். நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.