Published : 14,May 2021 03:53 PM

தடுப்பூசி போட்டுக்கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை - கோவா முதல்வர் ட்வீட்

Goa-to-give-covid-19-vaccine-to-differently-abled-people-on-priority

கோவாவில், தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரும் நபர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தரப்படும் என அம்மாநில முதல்வர் ப்ரமோத் சவாந்த் குறிப்பிட்டுள்ளார்.

image

இதுபற்றி அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் தகவலில், "மருந்தகங்களில் பணிபுரிவோர், மருந்து விநியோகத்தின் மொத்த உற்பத்தி தொடங்கி சில்லறை விற்பனை வரை செய்வோரையும் கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்கிறோம். இதோடு சேர்த்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்னுரிமை தரவும் திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விரைவில் மாநில அரசு சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார் அவர். முன்னதாக நேற்றைய தினம் அவர் வெளியிட்ட தகவலில், மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி விநியோகம் (18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி விநியோகம்) மே 15 முதல் தொடங்கும் என சொல்லப்பட்டிருந்தது. மேலும் கொரோனாவுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்போருக்கு இலவச மருத்துவம் தரப்படும் என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்போரின் சிகிச்சை செலவில் 80 சதவிகிதத்தை அரசே ஏற்கும் என்றும் கூறியிருந்தார் முதல்வர் ப்ரமோத் சவாந்த்.

இந்தியாவில் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கோவாவில் தற்போதுவரை கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளதென்றே சொல்ல வேண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 2,491 பேருக்கு புதிதாக கொரோனா உறுதிசெய்யப்பட்டும், 63 மரணங்கள் பதிவாகி உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்