[X] Close

நீலச் சுழல் விளக்கு காரில் வலம்வரும் ஆட்சியர்

namakkal-collector-travelling-in-Blue-Spiral-Lamp-car

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் நீலச் சுழல் விளக்கு பொருத்திய காரில் பயணம் செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


Advertisement

மே முதல் தேதியில் இருந்து விஐபி கலாச்சாரம் ஒழிய சிவப்பு விளக்கு அகற்றம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆபத்து காலத்தில் அவசர சேவைக்காக செல்லும் வாகனங்களை தவிர வேறு எந்த வாகனங்களிலும் சுழல் விளக்குகள் பொருத்தப்படகூடாது என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள விஐபி தலைவர்கள் பலரும் தங்களது காரில் இருந்த சிவப்பு சூழல் விளக்குகளை அகற்றினர். மத்திய அரசின் அறிவிப்பிற்கு பிறகு, குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கு அகற்றப்பட்டது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உள்ள மு.ஆசியா மரியம் தனது இன்னோவா காரில் நீல நிற சுழல் விளக்கு பொருத்தியவாறே பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close