Published : 28,Jul 2017 04:37 AM
பாலியல் வன்முறை வழக்கில் இன்னொரு நடிகையிடம் விசாரணை!

நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஆட்களை ஏவியதாக. நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கில் மற்றொரு நடிகையிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
திலீப் தலைமையில் பல மலையாள நடிகர்கள், நடிகைகள், பாடகர், பாடகிகள் வெளிநாடுகளுக்கு சென்றுவந்துள்ளனர். நடிகை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட பின் வெளிநாட்டு கலைநிகழ்ச்சிக்கு சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட, நடிகையும் பாடகியுமான ரிமி ரோனியிடம் போலீசார் நேற்று விசாரித்தனர். சிறப்புபடை போலீசார் அவரிடம் போனில் நடத்திய விசாரணையில், ‘திலீப் மற்றும் காவ்யாவுடன் தனிப்பட்ட முறையும் நட்பு ஏதும் இல்லை என்றும் நடிகை பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரத்தை சேனலில் பார்த்தே தெரிந்துகொண்டதாகவும் ரிமி தெரிவித்துள்ளார்.