
கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பும்படி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், ''அறிவியல் ரீதியிலான கணக்கீட்டின் படி கேரளாவில் மருத்து ஆக்சிஜனின் தினசரி தேவை அடுத்த மூன்று நாட்களில் 423 மெட்ரிக் டன் என்ற அளவில் அதிகரிக்கலாம். கேரளாவில் தற்போது தினமும் 212 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.
மாநிலத்தில் 14 மற்றும் 15-ம் (இன்றும்,நாளையும்) தேதிகளில் புயல் மற்றும் கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மற்றும் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களில் மின் தடை ஏற்படலாம். இதனால், ஆக்சிஜன் விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டலாம்.
இதனால், கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்க வேண்டும். ஆக்சிஜன் தேவையை மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் மாநில அரசால் பூர்த்தி செய்ய முடியாது. கேரளாவுக்கு ஒதுக்கப்படும் தினசரி ஆக்சிஜன் அளவு 450 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.