சேலம் மாவட்டத்தில் திமுகவினரால் தூர்வாரப்பட்ட ஏரியைப் பார்வையிடச் சென்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சேலம் எருமைப்பட்டியில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிட்டு பின்னர் சேலத்தில் நடக்கவிருந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஏரியை பார்வையிடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. எனினும் திட்டமிட்டபடி ஏரியை பார்வையிடுவதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் ஸ்டாலின் கோவை சென்றார். அங்கிருந்து சாலைமார்க்கமாக சேலம் சென்ற ஸ்டாலினைக் கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தலைமையில் 400க்கும் அதிகமான போலீசார், கோவை கனியூர் சுங்கச்சாவடி அருகே குவிக்கப்பட்டிருந்தனர்.
ஸ்டாலினை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ஏரியைப் பார்வையிட செல்லக்கூடாது என்றும், கைதாகி ஒத்துழைக்குமாறும் கூறினர். ஸ்டாலினைக் கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் சாலைமறிலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் நடந்த போராட்டத்திற்குப் பிறகு ஸ்டாலின் கைதாவதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஸ்டாலின், சுப்புட்சுமி ஜெகதீசன், பைந்தமிழ் பாரி, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, கனியூரில் உள்ள ரங்கா மஹாலில் தங்கவைக்கப்பட்டனர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு கோரி , ஏற்கனவே அறிவித்த மனித சங்கிலி போராட்டம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால், மற்ற திமுகவினர் கைதாகாமல் கலைந்து சென்றனர்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?