[X] Close

கோவில்பட்டி: குழந்தையுடன் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை!

தமிழ்நாடு

Husband-suicide-due-to-wife-leaving-in-kovilpatti

கோவில்பட்டி அருகே குழந்தையுடன் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு வண்டானம் கிராமத்தினை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் சங்கிலித்துரை(32). இவர் தச்சு வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் எட்டயபுரம் நம்பியாபுரம் கிராமத்தினை சேர்ந்த குருலெட்சுமி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு 2வயதில் ஆண் குழந்தை உள்ளது. சங்கிலித்துரை சரிவர வேலைக்கு செல்லமால், மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த காரணத்தினால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

image


Advertisement

இதில் குருலெட்சுமி கோபித்து கொண்டு தனது குழந்தையுடன் நம்பியாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிக்கு சென்று விட்டார். வீட்டிற்கு வருமாறு சங்கிலித்துரை அழைத்துள்ளார். ஆனால் குருலெட்சுமி மறுத்து விட்டதாக தெரிகிறது. மனைவி, குழந்தை பிரிந்து சென்று விட்டதால் கடந்த சில நாள்களாக மனவேதனையுடன் சங்கிலித்துரை இருந்துள்ளார். குருலெட்சுமி கோபம் குறைந்தவுடன் பேசி அழைத்து வருவோம் என்று சங்கிலித்துரை உறவினர்கள் அவரை சமதானப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையில் வீட்டில் யாரூம் இல்லாத நேரத்தில் சங்கிலித்துரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் கிடைத்ததும் பசுவந்தனை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

=====


Advertisement

மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


Advertisement

Advertisement
[X] Close