சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் தீவுக்கு போர்க்கப்பலை அனுப்ப இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் ஃபால்கான், தென்சீனக் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொள்ள போர்க்கப்பலை அடுத்த ஆண்டில் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், எந்த பகுதியில் அந்த கப்பலை நிறுத்துவது என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை. தென்சீனக் கடல் பகுதிக்குள் நுழைவதை சீனா தடுக்க முடியாது என்று கூறினார். தென்சீனக் கடல்பகுதியில் உள்ள வூடி தீவுப் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ள சீனா, அந்த தீவுப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி வருகிறது. மேலும், அந்த தீவை சீனாவின் அதிகாரப்பூர்வ பகுதியாகவும் அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கு பல்வேறு உலக நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
ஆனால், தென்சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுக்கூட்டங்களுக்கு புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. அந்த பகுதியில் ஜப்பானுடன் இணந்து இங்கிலாந்து கடந்தாண்டு போர் ஒத்திகைகளில் ஈடுபட்டது. இந்த விவகாரத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்