மதுரையில் சோகம்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு!

மதுரையில் சோகம்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு!
மதுரையில் சோகம்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு!

மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவர் சண்முகப்பிரியா, அனுப்பானடி சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால், நுரையீரலில் 90 சதவிகிதம் அளவுக்கு தொற்று ஏற்பட்டதால், சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்ப்பிணியாக இருந்த காரணத்தால் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நிலையில், கொரோனாவுக்கு தாயும், அவரின் வயிற்றில் இருந்த சிசுவும் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, முன்களப் பணி வீராக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரும்பணி ஆற்றிய இளம் மருத்துவரை இழந்திருப்பது வேதனையளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com