[X] Close

வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக புறப்பட்டு விட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகவல்

ஐபிஎல் திருவிழா

Everyone-from-Rajasthan-Royals-has-safely-departed-from-Delhi--says-franchise-COO-Jake-McCrum

தங்கள் அணி வீரர்கள் அனைவரும் டெல்லியில் இருந்து பாதுகாப்பாக புறப்பட்டு விட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


Advertisement

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியிலிருந்தும் வீரர்கள் தங்கள் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு வீரர்களைப் பாதுகாப்பாக அவர்கள் ஊருக்கு அனுப்புவது பி.சி.சி.ஐ.க்கும் அணி நிர்வாகங்களுக்கும்  ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. 

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனையில் 'நெகட்டிவ்' முடிவுகளுடன் டெல்லியில் இருந்து பாதுகாப்பாக புறப்பட்டு விட்டதாக அந்த அணியின் முதன்மை செயலாக்க அதிகாரி ஜேக் மெக்ரம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.   


Advertisement

இதுதொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், "எங்கள் அணியின் வீரர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா பாதிப்பு இல்லாமல் டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளனர். பெரும்பாலான வீரர்கள் வீட்டிற்கு சென்றடைந்துவிட்ட தகவலறிந்து நாங்கள்  மகிழ்ச்சியடைகிறோம். பிசிசிஐ-க்கும், முன்களப் பணியாளர்களுக்கும், ஹோட்டல் ஊழியர்களுக்கும் அனைவரும் நன்றி மற்றும் சக அணி நிர்வாகிகளின் ஆதரவுக்கும் ஒரு பெரிய நன்றி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


Advertisement

கொரோனா அச்சத்தால் ஆஸ்திரேலியா வீரர் ஆண்ட்ரூ டை மற்றும் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் ஏற்கனவே போட்டியின் பாதியிலேயே விலகி நாடு திரும்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement
[X] Close