Published : 27,Jul 2017 09:53 AM

பெற்றோர் கண் முன்னே சிறுமி வன்கொடுமை: பஞ்சாயத்து உத்தரவால் அவலம்

Panchayat-ordered-Little-girl-abuse-before-the-parent-s-eye

பாகிஸ்தானில் பஞ்சாயத்து உத்தரவுபடி பெற்றோரின் கண் முன்னே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் முஷாபராபத் பகுதியில் அஷ்பக் என்பவரது 12 வயது சகோதரியை வாட்டா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதற்கு தண்டனையாக வாட்டாவின் 16-வயது சகோதரியை அவரது பெற்றோரின் கண் முன்னே பாலியல் வன்கொடுமை செய்ய பஞ்சாயத்து கவுன்சில் உத்தரவிட்டது. இதனையடுத்து பெற்றோரின் கண் முன்னே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பாகிஸ்தான் காவல்துறையினர், பஞ்சாயத்து கவுன்சில் தலைவர் உள்பட 25 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்