முழு ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நிலையில், இன்றும் நாளையும் கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் வரும் 10 ஆம் தேதி 4.00 மணி முதல் 24-ஆம் தேதி காலை 4.00 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அத்தியாவசியப் பணிகள் தவிர, அனைத்து பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், முன்னேற்பாடுகளை செய்து கொள்ள இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு நாள்களில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!