[X] Close

கர்நாடகாவுக்கு கூடுதல் திரவ ஆக்சிஜனை விநியோகிக்க உத்தரவு: உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு

இந்தியா,கொரோனா வைரஸ்

Order-to-supply-extra-liquid-oxygen-to-Karnataka--Supreme-Court-refuses-to-intervene-

கர்நாடகாவுக்கு கூடுதல் திரவ ஆக்சிஜனை விநியோகிக்குமாறு அம்மாநில உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.


Advertisement

 கர்நாடகாவில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான திரவ மருத்துவ ஆக்சிஜனை நாளொன்றுக்கு 965 மெட்ரிக் டன்னிலிருந்து ஆயிரத்து 200 மெட்ரிக் டன்னாக அதிகரித்து வழங்கும் படி மத்திய அரசுக்கு பெங்களூரு உயர்நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

image


Advertisement

 அப்போது, ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் ஆக்சிஜனை ஒதுக்க உத்தரவுகளை பிறப்பிக்கத் தொடங்கினால், அது ஆக்சிஜன் விநியோகத்தில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

 இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 5ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு நன்கு அளவீடு செய்யப்பட்ட, திட்டமிட்ட மற்றும் நியாயமான அதிகாரத்தை பயன்படுத்தியதாகும் என்று தெரிவித்தனர்.


Advertisement

Advertisement
[X] Close