[X] Close

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது - சோனியா காந்தி விமர்சனம்

இந்தியா

Sonia-Gandhi-has-expressed-concern-that-India-is-paralyzed

மக்கள் மீது எந்த பச்சாதாபமும் இல்லாத ஒரு அரசியல் தலைமையால் இந்தியா முடங்கிவிட்டதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார்.


Advertisement

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக பேசிய சோனியா, பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டு மக்களை காக்கக் தவறிவிட்டது என்பதை திட்டவட்டமாகச் சொல்கிறேன் என்று தெரிவித்தார். மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.

எண்ணற்ற கொரோனா நோயாளிகள் சாலைகளிலும் வாகனங்களிலும் காத்திருந்தும் மருத்துவ உதவி கிடைக்காமல் துயரங்களை சந்தித்து வருவதாக அவர் வேதனையுடன் கூறினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மோடி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் சோனியா காந்தி குற்றஞ்சாட்டினார்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close