[X] Close

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை!

தமிழ்நாடு

Summer-rains-in-various-parts-of-Tamil-Nadu

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் சுட்டெரித்து வரும் சூழலில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.


Advertisement

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் பிற்பகலில் திடீரென கோடை மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென கோடை மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் கோடை உழவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 2 மணி நேரம் வரை கோடை மழை பெய்தது. இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி, புலிச்சோலை அருவி மற்றும் வில்பட்டி அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

கோடை மழையால் ஒருபுறம் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவும் சூழலில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை தீப்பிடித்து எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ அருகில் உள்ள கட்டடங்களுக்கு பரவாத வகையில் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்னல் தாக்கியபோது பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சேதமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close