Published : 27,Jul 2017 08:36 AM

ஏரியைப் பார்வையிட முயன்ற ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டார்

MK-stalin-aresst

சேலத்தில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிட முயன்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோவையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

சேலத்தில் உள்‌ள கட்சராயன் ஏரியை பார்வையிட முயன்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டார். சேலம் செல்லும் வழியில் கோவையிலேயே ஸ்டாலினை போலீசார் தடுத்து நிறுத்தினர்‌. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி ஏரியை பார்வையிட அவருக்கு போலீசார் ‌அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி அவர் ஏரியை பார்வையிட சென்றதால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், நீட் தேர்வுக்காக திமுக போராட்டம் நடத்தும் என்றதாலேயே, முதலமைச்சரும் அமைச்சர்களும் பிரதமரை சந்தித்துள்ளனர் என தெரிவித்தார். திமு‌க‌ அரசியல் நோக்கமின்றி மக்களுக்காக ஏரி குளங்களை‌ தூர்வாருவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்