Published : 07,May 2021 08:07 PM

காங்கிரசின் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது: சோனியா காந்தி

Congress-works-in-elections-are-dissappointing-says-Sonia-Gandhi

ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸின் செயல்பாடுகள் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனான மெய்நிகர் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் முடிவுகள் மூலம் காங்கிரஸ் எம்.பி.க்கள் சரியான பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் அடைந்திருக்கும் தோல்வி துரதிர்ஷ்டவசமானது என்று அவர் குறிப்பிட்டார்.

சரியாகச் சொல்ல வேண்டுமெனில், சற்றும் எதிர்பாராதது என சோனியா தெரிவித்தார். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டி விரைவில் கூடி ஆராயும் எனவும் சோனியா காந்தி கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்