Published : 27,Jul 2017 07:59 AM
கலாமின் அறிவுரைகளைப் பின்பற்றினால் இந்திய வல்லரசாகும்: விவேக்

மாணவர்கள் அப்துல் கலாமின் அறிவுரைகளைப் பின்பற்றினால் இந்திய வல்லரசாகும் என திரைப்பட நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
கலாமின் நினைவு தினத்தையொட்டி சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் தனியார் பள்ளி சார்பில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்றனர். அதில் கலந்து கொண்ட நடிகர் விவேக், இயற்கை வளத்தைக் காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மரம் வளர்ப்பு குறித்து மாணவர்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், அப்துல்கலாமின் அறிவுரைககளை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.