[X] Close

மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி வாழ்த்து!

தமிழ்நாடு

PM-Modi-and-Sonia-Gandhi-extended-wishes-to-Tamil-Nadu-CM-M-K-Stalin

தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.களுடன் காணொலியில் ஆலோசித்த சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக தமிழக முதல்வராக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் இருக்கையில் அமர்ந்து பணிகளைத் தொடங்கினார். சென்னை தலைமைச் செயலத்தில் காவல்துறை மரியாதையை ஏற்ற அவர், முதல்வர் இருக்கையில் முதன்முறையாக அமர்ந்து பணிகளைத் தொடங்கினார். முதல்வர் இருக்கையில் அமர்ந்த பின்னர் 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

இதையடுத்து வாழ்த்து சொன்ன பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close