[X] Close

விக்ரம் வேதா... என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?

superstar-praises-vikram-vedha

விக்ரம் வேதா படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை வெகுவாக பாராட்டியதாக படத்தின் இயக்குநர்களான புஷ்கர், காயத்ரி தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்துள்ள படம் விக்ரம் வேதா. திரைப்படம் வெளியானது முதலே ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது. திரைத்துறையினர் பலரும் படத்தைப் பாராட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓய்வில் இருந்து வரும் ரஜினிகாந்த் விக்ரம் வேதா படத்தை பார்த்துள்ளார். இதையடுத்து அவர், இயக்குநர்களான புஷ்கர், காயத்ரியை தொடர்புகொண்டு தரமான படத்தை அனைவரும் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளீர்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்கு இயக்குநர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளதோடு ரஜினிகாந்த் அவர்கள் தங்களை பாராட்டியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.


Advertisement

படம் வெளியாகி ஒருவாரம் ஆகியும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பிலும், வசூலிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாததால் படம் தொடர்ந்து சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close