Published : 06,May 2021 06:31 PM
'69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை' - ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை
தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்கத் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்துக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை சுட்டிக் காட்டி ஈபிஎஸ், ஓபிஎஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்கும், சமூக நீதி பாதுகாப்புக்கும் அடிப்படையாக 69% இடஒதுக்கீடு உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.